தொடங்கியது ரணில் ஆட்டம்:கைதாகலாம் கோத்தா?


மகிந்த குடும்பத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்த அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரால், கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது.
இதனிடையே கோத்தபாய மற்றும் மகிந்த குடும்பத்தவர்களை கைது செய்ய முன்வரும் காவல்துறை அதிகாரிகளிற்கு பதவி உயர்வும் பிரச்சினை ஏற்பட்டால் நாட்டை விட்டு குடும்பத்தவர்களுடன் வெளியேறும் பாதுகாப்பு உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளது.

No comments