காஷ்மீரிய பெண்களுக்காக களமிறங்கும் சீக்கியர்கள்!

சீக்கிய மதத்தில் உச்சப்பட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகத் திகழும் 'அகல் தக்த்' தின் தலைவர் ஜாதேதர், காஷ்மீரில் புகுந்து விருப்பம் போல ஆட்டம் போடலாம் என்று கனவு காணும் காவிகளுக்கு எச்சரிக்கையும், காஷ்மீரி பெண்களை பாதுகாக்க சீக்கியர்களுக்கு அறைகூவலும் விடுத்திருக்கிறார்.

காஷ்மீர் துண்டாடப்பட்ட பிறகு குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களாலும், சமூக ஊடகங்களிலும் காஷ்மீர் சிறுமிகள் அவமானப்படுத்தப்பட்டு வரும் சூழலில் அவர்களையும் அவர்களின் கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டியது சீக்கியர்களின் மதக்கடமை. எனவே காஷ்மீர் பெண்களை பாதுகாக்க சீக்கியர்கள் அனைவரும் முன்வந்து தமது மதக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜாதேதர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

No comments