மனிதாபிமானம் அற்ற இந்தியா, பாகிஸ்தான் செல்லும் நதிகளைத் தடுக்கும் நயவஞ்ச்சகம்!

இமாலய மலையிலிருந்து  பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளது உலக மனிதஉரிமையாளர்களுக்கு அதிர்ச்சிeஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தது.
மேலும்,சீனாவின் உதவியுடன் ஐ.நா. சபையில் காஷ்மீர் குறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டுமேன முயற்சி செய்தது உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு மோடியிடம் சமாதானமாக பேசச்சொல்லியிருப்பது கவனத்திற்குள்ளகியுள்ளாது.

காஷ்மிர் விடையத்தில் உலகரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு காரணமாக  இருப்பதால் இதற்கு பழிவாங்கும் நோக்கில் இப்போது புது நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது இந்திய பாஜக அரசு

இமய மலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுத்து நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீரை இந்தியாவிற்குள் மடை மாற்றி விடலாம் என யோசித்து, அதற்கான  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மேலும், அந்நாட்டுக்கு பாயும் நதிகளை இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல     இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்த மீறல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

No comments