மீனவருக்கு விடுதலை:படகுக்கு இல்லை?


நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (27) விடுவிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜூலை மாதமும் இம்மாத முற்பகுதியிலும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களே, இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வதிகாரி தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் அவர்களது படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்

No comments