தோற்றால் இனி வீட்டிற்கு:டக்ளஸ்?


ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் இனப்படுகொலையாளன் மஹிந்தவுடன் கூட்டு சேர்வது தொடர்பில் டக்லஸ், வரதாஜ பெருமாள்  மற்றும் சிறிதரன் உட்பட்டவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.அதிலும் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினில் இருந்து பிரிந்து முரண்பட்டு நிற்கும் டக்ளஸ் மற்றும் வரதராஜாப்பெருமாள் ஒன்றிணைந்து சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர்.

இதனிடையே நாங்கள் இதுவரை யாரை ஆதரிக்கப்போகின்றோம் எனபதை தீர்மானிக்கவில்லை. இவ்விடயத்தில் நாங்கள் அவசரப்பட முடியாது. ஏன் என்றால் நாங்கள் தமிழ் மக்களிடம் ஆட்சியாளர்களை நம்புங்கள் என்றோ, அரசுகளை நம்புங்கள் என்றோ கூறுவதுமில்லை. பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் என்றோ, பிரதமர் நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார் என்றோ புலம்புவதுமில்லையென டக்ளஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தில் அழிந்துபோன வடக்கு மாகாணத்தை துரிதமாக மீளக்கட்டி எழுப்பியதில் எமது முயற்சிகளும், அர்ப்பணிப்புகளுமே பிரதான காரணங்களாக இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்கமுடியாது.யார்? யாரை ஆதரித்தாலும் கடந்த காலத் தவறுகளையும், படிப்பினைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் எதிர்காலத்திற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறான தெளிவான தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இம்முறை தேர்தலிலும் தோல்வியை தழுவினால் அரசியலில் இருந்து விலகவுள்ளதாக டக்ளஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments