நல்லூரில் அனைத்துமே வரிசையில்?


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஆலயத்திற்கு செல்லும் பக்;தர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு காவல்துயையினரின் தீவிர சோதனை உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

யாழ்.மாநகரசபையினால் அமைத்து வழங்கப்பட்ட விசேட சோதனை சாவடிப்பகுதிகளில் பெண்களும்,பொது வெளிப்பகுதியில் ஆண்களும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

சில நுழைவாயில்களில் காவல்துறையினர் ஸ்கேனர் மூலம் உடல் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன் அடியவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட அபிடேனப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

இதனிடையே ஆலயத்தினுள் நுழைபவர்கள் கால்களினை கழுவிக்கொள்ள கூட காவல்துறை வரிசையில் வருகை தர அறிவுறுத்திவருகின்றது. 

நல்லூர் உற்சவத்தின் போது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments