காஷ்மீரிகளே கலங்காதீர்; சென்னையில் கிளர்ந்து எழுந்த தமிழர்கள்!

காஷ்மீரில் அமைதியை சீர் குலைக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடெங்கும் கண்டன அலைகள் பரவுகின்றன. தற்போது மத்திய அரசின் தவறான அணுகுமுறைகளால், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை இன்று சர்வதேச பிரச்சனையாக மாறியிருக்கிறது. இது இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறைகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவிலையே முதன் முதலாக சென்னையில் 30 கட்சிகள், இயக்கங்களின் ஆதரவோடு 22 மணி  நேரத்தில் 1000-க்கும் அதிகமான உணர்வாளர்கள் ஒன்று கூடி, மத்திய அரசை கண்டித்தும், காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த கோரியும், கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

காலை 11;30 மணிக்கு சைதாப்பேட்டையில் சமூக நீதி இயக்க தலைவர், பேராயர் எஸ்றா. சற்குணம் தலைமையில் தலைவர்களும், 1000-க்கும் மேற்பட்ட ஊணர்வாளர்களும் ஒன்று கூடினர்.                    

கூட்டத்தை சிதறடிக்கும் நோக்கத்தோடு காவல்துறையின் நூற்றுகணக்கில் குவிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அலைகழிக்கப்பட்டனர். பிறகு காவல்துறை கூட்டத்தை முறைபடுத்த ஒத்துழைப்பு கொடுத்தது.

போராட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, SDPI கட்சி மாநில செயலாளர் அமீர் அம்சா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாள் நிஜாமுதீன் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பிறகு, ஏராளமன பேருந்துகளில் அனைவரும் கைது செய்யப்பட்ட போது பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. இந்த ஆர்பரிப்பை அகில இந்திய அளவில் 100க்கும் மேற்பட்ட ஊடகங்கள் நேரலை செய்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் அனைவரும் கைதாகும்படி போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது. பிறகு போலிசார் கைதாக விரும்புவர்கள் கைதாகலம், மற்றவர்கள் செல்லலாம் என கூறினர்.

அதன் பிறகு போராட்டத்தில் பங்கேற்றவர்களில் திரளானோர் அணி, அணியாக கைதாகி நந்தனம் YMCA திடல் நோக்கி கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பேரா. சுப. வீரபாண்டியன் தலைமையில் காஷ்மீர் குறித்த அறிவுசார் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இதில், தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் நிஜாமுதீன், மஜக பொருளாலர் ஹாருன் ரசீது, சமுதாய கூட்டமைப்பு தலைவர் அப்போலோ அணிபா, தேசிய முன்னணி நிர்வாகி ஆவல் கணேசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி செந்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சத்ரியன் துரைரவேணுகோபால், தமிழ்நாடு மக்கள் கட்சி நிர்வாகி இளையராஜா, தமிழ் உரிமை கூட்டமைப்பு நிர்வாகி புலவர் ரத்தின வேலன், தமிழ்தேசிய பேரியக்கம் நிர்வாகி அருணபாரதி, ஜம்மியத்துல் உலமா ஹிந்த் ஷரிப், சமூகநீதி மக்கள் கட்சி உமர் முக்தார், தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிர்வாகி செந்தில்குமார், தமிழர் விடுதலை கழகம் சுந்தரமூர்த்தி, சோஷலிஸ மையம் மருதுபாண்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் தங்களது கண்டன கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்த பொதுவான கூட்டமைப்பு கருத்தியல் பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர்.

காஷ்மீரில் அமைதியை நிலை நாட்ட கோரி இந்தியாவிலையே சென்னையில் தான் முதல் போர் குரல் ஒலித்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

No comments