பயங்கரவாதம் புற்று நோய் போன்றது - பிரதமர் சாட்சியம்

குண்டுத் தாக்குதலுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு பிரிவினால் தனது பிரதமர் பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக் குழு முன் இன்று (06) மாலை ஆஜராகி சாட்சியமளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதற்கு போதுமான சட்டங்கள் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த அவர்,

ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்தது என கூற முடியாது. இது புற்று நோய் போன்றது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும்.

யாருடைய கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல வேறு எதனையும் பயன்படுத்த முடியும். தனி நபராலும் முடியும்.

எனவே புதிய பயங்கரவாத யுகத்தில் உள்ளதால் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். ஷஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்ததால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென் இந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல். என்றார்.

No comments