வைக்கோவுக்கு மீண்டும் சோதனை! சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக!
இந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
நிலுவையில் இருந்த தேசதுரோக வழக்கிற்கு அவசரமாகத் தீர்பளித்தது தொடங்கி மனஉளைச்சல் ரீதியாகவும் , கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்தியும் பல்வேறு வழிகளில் முயன்றுவருகின்றது. ஆனால் அவை அனைத்தையும் உடைத்தெறிந்து மீண்டும் பாராளுமன்றத்தில் வைகோ அடியெடுத்து வைக்க இருக்கிறார்.
ஆனாலும் வைகோ எம்.பி.யாகக்
கூடாது என பாஜகவினர் கடும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பாவும் வைகோவுக்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா
நாயுடுவை நாளை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை கொடுத்து தேசதுரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பதவி பிரமாணம்
செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்த இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னணியிலும் பஜகவினரே இருக்கின்றனர் என மதிமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும் வைகோ எம்.பி ஆவதை இனி எவராலும் தடுக்க முடியாது. தடைகளும் அவருக்கு புதிதில்லை எல்லாவற்றையும் தண்டி அவர் பாராளுமன்றத்தில் மீண்டும் காலடி வைப்பார் என கூறுகின்றனர்.

Post a Comment