வைகோவுக்கு போட்டியாக களத்தில் இறங்கினார் அன்புமணி!

மதிமுக பொதுசெயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதில் இருந்து அடுத்தடுத்து அவையில் தமிழக பிரச்சனைகள்குறித்து கேள்விகளும் மக்கள் விரோத திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து முழங்கி வருகிறார்,

இந்நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று தமிழில் பதவியேற்றதோடு இந்திய பிரதமர் மோடியுடன் சந்தித்து உரையாடி தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை  கேட்டுகொண்டார்.

இந்த சந்திப்புகள் குறித்து பாமக சார்பில் உடகங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில்...
பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முதலில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பிரதமர், அவரது பணி சிறக்க விருப்பம் தெரிவித்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முத்து விழா கொண்டாடப்பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஒருவர் அவரது வாழ்க்கையில் ஆயிரம் பிறைகளை காண்பது பெரும் பேறு என்று குறிப்பிட்டார். மேலும் டெல்லிக்கு வரும்படி மருத்துவர் ராமதாசுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தின் பாசன வளத்தை மேம்படுத்த கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்ற பிரதமர், “அடுத்து வரும் 5 ஆண்டுகளில் பாசனத்திட்டங் கள் மற்றும் நதிகள் இணைப்பில் அதிக கவனம் செலுத்துவேன். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு எவ்வளவு கோடி செலவானாலும் அதை நான் செயல்படுத்தியே தீருவேன்” என்று உறுதியளித்தார்.

தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். நைஜீரியாவின் நைஜர் படுகையில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அங்கு வேளாண்மை முற்றிலுமாக அழிந்து போனதையும், அதனால், அங்கு விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் அகதிகள் ஆனதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ், அதேபோன்ற நிலைமை காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்படாமல் தடுக்கும்படி கோரினார். அதைக்கேட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட துறையினருடன் இதுபற்றி பேசுவதாக உறுதியளித்தார்.
 
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உதவும்படியும் பிரதமரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். “7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் மனநிலை ஆகும்.

இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை” என்று கூறினார். இதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக பிரதமர் உறுதியளித்தார் என பாமக தரப்பில் குறிப்பிடுகின்றனர். 

எதிர்கட்சி வரிசையில் இருந்து அரசின் மக்கள் விரோத செயல்திட்டங்களுக்கு எதிராக செயற்பட போகும் வைகோவ இல்ல ஆளும் கட்சி கூட்டணியல் இருந்து இணங்கி தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பார அன்புமணி என அரசியல் விமர்சகர்களும், யார் முயற்சியிலாவது மக்களுக்கு நன்மை கிடைத்தல் சரி என்று சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

No comments