வெறிச்சோடிய நாடாளுமன்றம்:கூட்டமைப்பு வீரப்பிரதாபம்!



தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்றும் 25 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கெடுத்திருந்தனர்.

நேற்றைய தினமும் 25 பேர் வரையே பங்கெடுத்திருந்தனர். அதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.


இன்றைய அமர்வில் நாடாளுமன்றம் ஆட்களின்றி வெறிச்சோடியிருக்க கூட்டமைப்பினர் வீரப்பிரதாப உரைகளை ஆற்றியிருந்தனர்.

இதனிடையே இன்றைய நிலையில் ததேகூ தலைவர், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளின் கூட்டமொன்றுக்கான அழைப்பு விடுக்க வேண்டும் என்பது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் யோசனையாகும். புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு முன்னெடுப்புக்கும் ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயார்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கடந்த மூன்றரை ஆண்டுகளாக சாத்தியப்படாத புதிய அரசியல் யாப்பு இந்த அரசாங்கத்துக்கு எஞ்சி இருக்கும் காலத்திலும் கொண்டுவரப்படுவது சாத்தியம் இல்லை என்பது கூட்டமைப்புக்கு நன்கு தெரியும். ஆனாலும் அர்த்தமற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாடாளுமன்றில் இரண்டு நாட்களாக நடத்துகிறது. 

கூட்டமைப்பின் ஆட்களும் மேலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு ஆட்களைத் தவிர வேறு யாரும் இல்லாது இந்த விவாதம் நேற்று இடம்பெற்றதையும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.





No comments