எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்குச் செல்லுங்கள் - டிரம்பின் கருத்தால் சர்ச்சை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அமெரிக்க அதிபர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றில் வெள்ளை இன தேசியவாதப் போக்கை அதிபர் டிரம்ப் ஊக்குவிக்கிறார். இந்த விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்துவிட முடியாது என குறித்த பெண் நடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் அமொிக்க பூர்வீகத்தைக் கொணடிருக்கிருக்கவில்லை.

இதற்குப் பதிலடிகொடுக்கு முகமாக அதிபர் டிரம்ப் கருத்துக் கூறும் போது, அமெரிக்காவின் செயல்முறைகளில் விருப்பம் இல்லை என்றால், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் கூறியுள்ளார்.

எனினும் அவர் பெண் குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக தெரிகிறது.

ரஷிதா டலீப் அமெரிக்காவில் பிறந்தாலும் அவரது பூர்வீகம் பாலஸ்தீனம் ஆகும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான முதல் பாலஸ்தீன வம்சாவளி என்ற பெருமை இவருக்கு உண்டு.

இல்ஹான் உமர் சோமாலியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின முஸ்லிம் பெண் ஆவார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறியதாவது:-

முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பனர்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் நாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள்

அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே செல்லட்டும். அங்கு தான் உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு இருக்கும் திறமையை வைத்து, குற்றங்களாலும், ஊழலாலும் சிதைந்து போன அவர்களின் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யலாமே?

என்றே குறிப்பிட்டிருந்தார்.

No comments