சிங்களவர்கள் வெட்கி தலைகுனியட்டும்!


ஆதீன குரு மீது தேநீர் ஊற்றியமை குறித்து ஒட்டுமொத்த பௌத்த சிங்களவரும் வெட்கித் தலைகுனிய வேண்டுமென இந்து மகா சபை பிரமுகர் ந.பொன்ராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய கன்னியா சம்பவம் தொடரபில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தென்கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார் மீது மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்க வெளிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

பௌத்த தேரர்களால் ஆட்சி அதிகாரம் கட்டுப்படுத்தப்படும் சிறிலங்காவில் சைவத்தமிழ் ஆதீன முதல்வர் ஒருவர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இச்சம்பவம் குறித்து ஒட்டுமொத்த பௌத்தர்களும் வெட்கித் தலைகுனியவேண்டும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் இடம்பெற்றமையானது பொலிஸாரின் பாரபட்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மதகுரு ஒருவர் மீது அநாகரிக சம்பவம் இடம்பெற்றபோது சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யாத பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இன, மத நல்லிணக்கம் எனக் கூறி ஆட்சி நடத்துகின்ற சிறிலங்காவில் தமிழர்களுக்கு எப்போதும் உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்பதையே இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.

தமிழர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கின்ற சிங்களப் பேரினவாதம் நீதி கேட்கச் சென்றவரை நிந்தித்த செயலை தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments