புத்தளத்தில் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு


புத்தளம் பகுதியில் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 
நவகத்தேகம பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து பாரிய வெடி குண்டு உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
60 மில்லிமீற்றர் குண்டு மற்றும் 9960 டி56 ரக துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய இந்த ஆயதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயன்படுத்தாமல் இருந்த கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டை, வெடிகுண்டு கண்கானிப்பு பிரிவினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வெடிக்க வைத்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ இந்த பொருட்களை மறைத்து வைத்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments