சிவசக்தியும் லஞ்சம் பெற்றார்:தமிழரசு கொண்டாட்டம்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு நெடுஞ்சாலை அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட 50 மில்லியன் ஒதுக்கீட்டுனை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் பெற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் தற்போது ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கிராமங்களில் முன்னெடுக்கும் செயல் திட்டங்களான கம்பரெலியா மற்றும் விசேட ஒதுக்கீட்டு நிதிகளில் குறித்த திட்டமும் உள் அடங்குகின்றன. இவ்வாறான திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 மில்லியன் ரூபா திட்ட முன்மொழிவுகள் செயல்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 50 மில்லியன் ரூபா சிபார்சிற்கான திட்டங்களும் அனுமதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபாவிற்கான திட்டத்தை முன்மொழிந்தபோது ஆண்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபா மட்டும் ஒதுக்கும் நிலையில் மேலதிகமாகப் பெற்ற 2 கோடியானது இலஞ்சப் பணமாகவே கருதப்படும் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான திட்ட முன்மொழிவுகளிற்கு 10 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினரின் உறுதுணையில் சிவசக்தி ஆனந்தனும் 50 மில்லியனைப் பெற்றுள்ளதாக தமிழரசு தரப்பு தெரிவித்துள்ளது.

No comments