எதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது!

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன்னர், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக சுதா ரகுநாதனுக்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாக்களில் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்க கூடாது என்றும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கும், ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட மைக்கேல் மர்பி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது தொடர்பான புகைப்படங்கள், திருமண பத்திரிக்கை புகைப்படம் போன்றவைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதோடு, அவருக்கான எதிர்ப்பு வலுவாகவும் முன்வைக்கப்பட்டு வந்தது.

இத்தகைய சூழலில், சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில், இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments