பலி எண்ணிக்கை 21 ஆனது! விசாரணைக்கு உத்தரவிட்டார் இம்ரான்கான்.

பாகிஸ்தானின் சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையத்தில்  தரித்து நின்ற சரக்கு தொடரூந்துடன்  பயணிகள்  தொடரூந்து வந்து மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் 21 பலியாகியுள்ளதோடு 89பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
தொடருந்துகள் சுக்குநூறாகநொறுங்கிப்போனதால் மீட்புப் பணிக்காக இராணுவத்தின் உதவி நாடியுள்ளனர்.
 விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்ததோடு குறித்த விபத்து ஏற்பட்டது தொடர்பான விசாரணைக்கும்  உத்தவிட்டுள்ளார்.

No comments