முல்லைதீவில் இராணுவ சிப்பாயின் சடலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு 59ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 16ஆவது பொறியியல் பிரிவு முகாமில் சமையல் செய்வதற்காக வருகைதந்திருந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இன்று காலை குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்து முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த சம்பவத்தில் உடலமாக மீட்கப்பட்டவர் கெக்கிராவ பகுதியை சேர்ந்த 57 வயதுடைய கருணாரட்ன என தெரியவருகின்றது

No comments