அடுத்த இராணுவத்தளபதி சவேந்திர சில்வா?


இலங்கையின் அடுத்த இராணுவத்தளபதியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா பொறுப்பேற்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தனது சேவையை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஜனாதிபதி அதற்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இராணுவத் தளபதி தற்போது சேவை நீட்டிப்பில் பணியாற்றி வருகிறார், இது ஆகஸ்ட் 18 அன்றுடன் காலாவதியாகிறது.

இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது ஜனாதிபதியால் வழங்கப்படும் சேவையின் விரிவாக்கத்தில் பதவியில் இருக்கிறார். 

இதன் பிரகாரம் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஓய்வு பெற்றால் அடுத்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியை பொறுப்பேற்கலாமென எதிர்பார்க்கபடுகின்றது.

No comments