மீள அமைச்சு பதவியா?இன்று முடிவு!
அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இன்றும் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பிலும், கடந்த ஏப்ரல் 21 இன் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் இதுவரையில் அரசாங்கம் எந்த தீர்வையும் முன்வைக்க வில்லை. இது தொடர்பில் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவரும் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். அதுவரையில் அமைச்சுப் பொறுப்புக்களை எடுக்காதிருக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் உள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அபேட்சகர் தொடர்பில் உடன்பாடொன்றுக்கு வராத நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க ஒப்பம் இடுவது குறித்தும் இன்னும் கலந்துரையாட வேண்டும் என தலைவருடனான கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நடாத்திய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment