4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காதலர்கள் கல்லறை கண்டுபிடிப்பு!
கஜகஸ்தான் நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காதல் தம்பதிகளின் கல்லறை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான்
நாட்டின் காரகண்டா மாநிலத்தில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குழி
தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது இரண்டு எலும்புக் கூடுகள் ஒன்றாக
புதைக்கப்பட்ட கல்லறை ஒன்று இருந்துள்ளது.
அந்த எலும்புக் கூடுகள் ஒருவர்
முகத்தை ஒருவர் பார்ப்பதை போல இருந்துள்ளது. இந்த எலும்புக் கூடுகளை
கண்டதும் ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அருகிலேயே ஏராளமான
தங்கம், வெள்ளி நகைகள் இருந்துள்ளன. ஒரு எலும்புக் கூட்டின் அருகே
வளையல்களும், மோதிரங்களும் கிடந்துள்ளன. இந்த எலும்பு கூடுகளை ஆராய்ச்சி
செய்த ஆய்வாளர்கள் கூறுகையில்,
இவை
16,17 வயதுடைய பெண் மற்றும் ஆண் எலும்பு கூடுகள். இந்த கல்லறையில் ஒருவரை
ஒருவர் பார்த்தபடி இறந்துள்ளனர். இதனால் இவர்கள் காதலர்களாகத்தான் இருக்க
வேண்டும். அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள் என ஆராய்ச்சிகள் தொடரப்பட்டு
வருகின்றன. மேலும் இந்த பகுதியில் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள
உள்ளோம் என கூறியுள்ளனர்
Post a Comment