தானியங்கி சுத்தம் செய்யும் கழிப்பறை அறிமுகம்!

சிங்கப்பூர்  உணவு விடுதிகள் பொது இடங்களில் சுயமாகச் சுத்தம் செய்துகொள்ளும் கழிப்பறைகளைக் உருவாகும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில்
தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னெடுக்கும் இந்த செயல்திட்டத்தில் ஊழியர்களுக்கான தேவையைக் குறைக்கவும் சுத்தங்களை ஒழுங்காக பேணவும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் சுயமாகச் சுத்தம் செய்துகொள்ளும் தொழில்நுட்ப  கழிப்பறைகளில் நிறுவப்படும் என்றும்,தொழில்நுட்ப அம்சத்தால் கழிப்பறையின் மூடியை சுயமாக திறக்கவும் மூடவும் முடியும், ஈரத்தை உறிஞ்சவும் முடியும்.
கிருமியைக் கொல்லும் திரவமும் தண்ணீரும் சுயமாகப் பாய்ச்சப்படும். சுவர்களும் தரையும் தானாகவே சுத்தப்படுத்தப்படும்.
கழிப்பறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்துகொள்ளும் வகையில் நிறுவப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.

No comments