சராவிற்கு வந்ததே சுடலை ஞானம்?
அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டு இதுவரை காலமும் ஒட்டி இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு இப்போதுதான் சுடலை ஞானம் பிறந்துள்ளது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாழில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மைத்திரிபால சிறிசேன, ரணில் அரசாங்கம் தமிழ் மக்கiளை ஏமாற்றிவிட்டதாக கவலை வெளியிட்டுள்ளார். ஆட்சி பெறுப்பினை ஏற்றுக் கொண்ட ஒரு வருடத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய காரியங்களை 4 வருடங்களாகியும் செய்யவில்லை என்றும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இருந்த சரவணபவனுக்கு இப்போதுதான் சுடலை ஞானம் பிறந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை இப்போது குறை கூறுகின்றார்கள்.ஆனால் இதே அரசிற்கு கைதூக்கி ஆதரவளிப்பவர்களாக கூட்டமைப்பினரே உள்ளனர் எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
Post a Comment