உமாமகேஸ்வரன் கொலை:சித்தார்த்தனிற்கு தெரியுமாம்?

புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் அதன் தற்போதைய தலைவர் த.சித்தார்த்தன் அறிந்திருந்ததாக கழக முக்கியஸ்தர் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சிலர் உமா மகேஸ்வரனின் மரண தண்டனையை யாரோ சிலர் கூலிக்காக செய்தது போல் காண்பிக்க முற்படுகிறார்கள்.

மாணிக்கதாசன் எனக்கு தகவல் தருகையில் கொழும்பில் இருந்த புளொட் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த தலைவர் உமாவை பார்த்து பேச வேண்டும் என்று தகராறு பண்ணினார்கள் என தெரிவித்திருந்தார்.பின்பு கல்கிசையில் ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன் சந்திப்பு நடந்த போது தோழர்களும் உமா மகேஸ்வரனும் மிகப்பெரும் வாக்குவாதபட்டனர். உமா மகேஸ்வரன் தோழர்களை பார்த்து நீங்கள் எல்லாம் இயக்கத்தை விட்டு போங்கள் என்னால் புது இயக்கம் கட்டியெழுப்ப முடியும் எனக்கூறினார்.அப்போது மாறன் போன்ற தோழர்கள் மிகக் கடுமையாக ஆரம்பத்திலிருந்து அக்காலம் வரை உமாமகேஸ்வரன் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டியதோடு அத்துலத் முதலியின் தொடர்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். மாணிக்கம்தாசனும் சித்தார்த்தனும் தோழர்களை சமாதானப்படுத்த செய்த முயற்சி பலிக்கவில்லை எனக் கூறினார். அங்கிருந்த அவ்வளவு தோழர்களும் உமா மகேஸ்வரனைபதவியில் இருந்து துரத்த வேண்டும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசியிருக்கிறார்கள்.

அச்சமயம் கொழும்பு நிர்வாகப் பொறுப்பில் என்னைத்தான் போட்டிருந்தார்கள். என்னை அங்கு வர முடியுமா என மாணிக்கம் தாசன் கேட்டார். நான் இந்த நேரத்தில் அங்கு வர விரும்பவில்லை என கூறினேன் . பொடியங்கள் எல்லோரும் பெரியவருக்கு எதிராக இருக்கிறார்கள் என்ன நடக்குமோ தெரியாது என அவர் கூறினார். இதன் பின்புதான் எல்லோரும் கலந்துபேசி இரகசியமாக தலைவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தார்கள்.

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் மனம் திறந்தால்; முழு உண்மைகள் தெரிய வரும். அந்தக் கூட்டத்திற்கு பின்பு எடுத்த நடவடிக்கைகளதான் இது. இதில் ஆறும் பேர் உமாமகேஸ்வரனை கூலிப்படையாக கொலை செய்ய செயல்படவில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் அப்படி கூலிப்படையாக செயல்பட்டு இருந்தால் அதற்கு தலைமை தாங்கியவர்கள் மாணிக்கதாசன் மற்றும் சித்தார்த்தன் மற்றும் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் அனைவரும் தான் என வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.


No comments