வடக்கிற்கும் வருகை தரவுள்ள க்ளேமன்ட் நைலெட்சோசி?


இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் க்ளேமன்ட் நைலெட்சோசி தனது பெருமளவு நேரத்தை வடக்கில் செலவிடவுள்ளார்.

இன்று இலங்கை வரும் அவர் எதிர்வரும் ஒன்பது நாட்கள் தங்கியிருப்பதுடன், இலங்கையின் தற்போதைய நிலையைத் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் தாயகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள இராணுவ நெருக்குதல்கள் மற்றும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னராக அவரது பயணம் அமைந்துள்ளது.இலங்கை முக்கிய சவால்களுக்கு நாடு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களின் சுதந்திரங்களை மேலும் பலப்படுத்துவதற்காக, இந்த விஜயம் உதவும் என்றும் க்ளேமன்ட் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த விஜயத்தின் போது, அரச அதிகாரிகள், நீதிமன்றங்கள், ஊடகங்கள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக யாழில் அவர் பல தரப்புக்களையும் சந்தித்து பேசவுள்ளதாக தெரியவருகின்றது.

No comments