எரிந்து விழுந்த வானூர்தி! 10பேர் உடல் கருகி பலி;

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில்  தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக வானூர்தி விபத்துக்குள்ளனத்தில் அதில் இருந்த அனைவரும் பலியாகியுள்ளனர்.

ஓடுபாதையில் இருந்து விமானம் கிளம்பி மேல் நோக்கி எழும்ப முற்பட்ட போது திடீரென இயந்திரம் கோளாறு ஆனதினால் தரையிறக்க முற்பட்ட போது வானூர்தி கட்டுப்பாட்டை இழந்தது அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதியது.இதனால் வானூர்தி வெடித்து தீப்பிடித்ததில் அதில்  இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் உட்பட  10 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். இதுகுறித்துகாவல் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments