ராஜினாமா செய்தது ஏன்; பாரதிராஜாவின் விளக்கம்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பதவியை பாரதிராஜா தான்  ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

“கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன் என்று தனது அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை ஒரு மூத்த இயக்குநராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்காலத்துக்கும் எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்” என்று மேலும் கூறியுள்ளார்.

No comments