பாராளுமன்றத்தை அடித்தது நொறுக்கி உள்நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், குற்றவாளிகளைச் சீனாவிடம் ஒப்படைக்க வகைசெய்யும் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்துக்குள்  நுழைந்ததை அடுத்து அந்நாட்டில் பதற்றநிலை தோன்றியுள்ளது.
 முகமூடிகளையும், தொப்பிகளையும் அணிந்திருந்து  இழுவண்டி, கம்பங்கள் போன்றவற்றைக் கொண்டு சட்டமன்றக் கட்டடத்தின் சன்னல்களை உடைத்து எறிந்துள்ளனர். உள்ளே சென்றவர்கள் பிரித்தானிய நாட்டு கொடியை கட்டியதுடன், வர்ணங்களால் உள்ளே எழுதி தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த ஆர்பாட்டத்தில் அதிகமாக மாணவர்கள்ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





No comments