மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை!

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று ஐக்கிய தேசிய கட்சியின் பின்னாசன உறுப்பினர்களால்  கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமை மற்றும் கடந்த கால செயற்பாடுகளில் அரசியலமைப்பை மீறியமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கி இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
குறித்த பிரேரணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைய்யொப்பங்கள் பெறப்பட்டதன் பின்னர் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments