கிளிநொச்சியில் தாயும் மகனும் கொலை!


கிளிநொச்சி ஜெயந்தி நகரில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு படுக்கையில் வைத்து அவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.வள்ளியம்மை(64வயது) மற்றும் அவரது மகனான சி.விக்கினேஸ்வரன்(வயது 32) ஆகிய இருவருமே சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக கிளிநொச்சியில் அதிகரித்துவரும் குழு மோதல்களின் தொடர்ச்சியாக கொலைகள் அரங்கேற்றப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

No comments