தர்ஷன ஹெட்டியாராச்சி மக்கள் சேவையாற்றினாராம்?


இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் இராணுவ மேலாதிக்கத்தை பேண அரசுகள் தொடர்ந்தும் முனைப்புகாட்டியே வருகின்றன.அவ்வகையில் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக நியமனம் பெறுபவர்கள் முக்கியத்துவத்துவத்தை பெற்று வந்துள்ளனர்.சரத் பொன்சேகா முதல் மகேஸ் சேனநாயக்க வரை அப்பதவிகளின் தொடர்ச்சியாக இராணுவத்தளபதிகளாகியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி பதவியுயர்வுடன் கொழும்புக்கு மாற்றலாகிச் செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மீண்டும் ஆயுதமுனைப்பு போராட்டங்களை ஒடுக்கி வெற்றிபெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் யாழ் மக்களுக்காக மேற்கொண்ட மனிதாபிமான (?) சேவைகளை பாராட்டும் முகமாக வடக்கு ஆளுநர்  யாழ் நகரப்பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கௌரவித்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments