கூட்டமைப்பு எம்பிகளிற்கு மேலும் 50மில்லியன்?


த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், அபிவிருத்தித் தேவைகளுக்கான நிதியாக, 50 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக, அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவி இன்றி செயறப்ட முடியாது என்றும் இதை, ஐ.தே.க - த.தே.கூ அரசாங்கம் என்றே கூறவேண்டும் என்றும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியால், அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், கல்முனை பிரதேசச் செயலகத்தை தரமுயர்த்தித் தருவதாக, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, த.தே.கூ வாக்களித்தது என்றும் கூறினார்.

No comments