ரணிலும் சிங்களவர்களை வடக்கிற்கு அனுப்புகின்றார்?


ரணில் அரசினை முண்டியடித்து கூட்டமைப்பு காப்பாற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் சிங்கள இளைஞர்களிற்கு பதவி வழங்கி வடக்கிற்கு அரசு அனுப்பிக்கொண்டிருக்கின்றது.அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த 9 சிங்கள இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணி வழங்கப்பட்டுள்ள இளைஞர்களில் முகாமைத்துவ உதவியாளர்களாக மூவரும் சாரதியாக ஆறுபேருமாக ஒன்பது பேர் வடக்கிற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்கள்.

கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின்னர் மகிந்த பிரதமராகியிருந்த நிலையில் தென்னிலங்கையிலிருந்து 61 இளைஞர்கள் மின்சாரசபைக்கு நியமிக்கப்பட்டு வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதையடுத்து  சிறிது காலம் நி;யமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அத்துடன் மகிந்தவின் உத்தரவின் பேரிலேயே இந்நியமனங்கள் நடந்ததாக வியாக்கியானம் செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் ரணில் ஆட்சியில் தென்னிலங்கையிலிருந்து இளைஞர்கள் வடக்கிற்கு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நேற்றைய தினம் இலங்கை மின்சார சபையின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு ஒன்பது இளைஞர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் .

வடக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையில்லாமல் திண்டாடிவருகின்ற நிலையில் தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் வழங்கப்பட்டுவருகின்றது.

இதேநேரம் நியமிக்கப்பட்டுள்ள 9பேரில். ஒருவர் மட்டுமே கல்முனையைச் சேர்ந்த தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.-

No comments