ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக முதல்முறையாக பெண் தேர்வாகியுள்ளார்!

ஐரோப்பிய பாராளுமன்ற ஆணையத்தின் புதிய தலைவராக முதல்  முறையாக  பெண்மணி ஒருவர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெல்ஜியத்தை பிறப்பிடமாக கொண்ட 60வயதான உர்சுலா வோன் டேர்லேயன் ஜெர்மனியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (Christian Democratic Union) கட்சியின் அரசியல்வாதியாக இருப்பவர். தற்போதைய ஜெர்மன் சென்ஸலர் அங்கேலா மேர்க்கெலின்  அமைச்சரவையில் 2013முதல் ஜெர்மனியின் முதல் பெண்  பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பவர்,

ஸ்ட்ராஸ்பர்க் நேற்று இரவு நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில்  நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 374 வாக்குகள் ஆதரவாக பெற்று தேர்வாகியுள்ளார். எதிராக 327 வாக்குகளும் 22பேர் வாக்கெடுபில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments