முள்ளிவாய்க்கால் இடிந்து கிடக்கிறது; ஈழத்திலிருந்து வைகோவுக்கு அழைப்பு
முள்ளிவாய்க்கால் இடிந்து கிடக்கிறது உங்களால்தான் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என வைகோவை தொலைபேசி மூலமாக அழைத்து பேரூர் சாந்தலிங்க அடிகளார் பேசியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக அனுப்பிவைத்துள்ள செய்தி குறிப்பில்.
தமிழ் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து பேரூர் சாந்தலிங்க அடிகளார், தலைவர் வைகோ அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
நாடாளுமன்றப் பணி சிறக்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
இங்கே முள்ளிவாய்க்காலில் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. ஈழத் தமிழர்களின் அழிவின் அடையாளங்களைப் பார்த்து வேதனை அடைகின்றேன். இவர்களுக்கு மீண்டும் ஒரு விடியலும் புது வாழ்வும் கிடைப்பதற்காக இறைவனை இறைஞ்சுகின்றேன்.
ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்ற தங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்.வெற்றி பெறட்டும். ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடைக்கட்டும் என்றார்.
அதற்கு வைகோ அவர்கள் பதில் அளிக்கும்போது,
ஐயா, ஈழத்தமிழர்களின் அவலங்களை நான் சொல்லும்போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்ற நிலையிலேயே எடுத்துக் கொள்வார்கள்.
நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கே மக்களுக்கு எடுத்துக் கூறும் போது அதை நடுநிலையாளர்கள் நல்லோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Post a Comment