கிளிநொச்சியில் போராட்டம்?


சாதாரண புகையிரத கடவை அமைப்பதற்கு கூட போராடித்தான் தீர்வை பெறவேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வகையில் பாதுகாப்பான புகையிரதக்கடவை கோரி கிளிநொச்சி 155 ஆம் கட்டை காளி கோவிலடியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.

குறித்த கடவையில் இதுவரை மூன்று விபத்துக்களில் எட்டு பேர் பலியாகியுள்ள போதிலும் புகையிரதக்கடவையினை அமைக்க அரசு பின்னடித்துவருவதாக மக்கள் குற்றஞ்சுமத்தினர்.

போராட்டகாரர்கள் புகையிரத பாதையினை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுக்களை நடத்தியதையடுத்து அவர்கள் விலகி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments