நாகபட்டினத்தில் கைதான இலங்கையர்களிடம் தீவிர விசாரணை


தமிழகத்தின் நாகபட்டினம் – வேதாரான்யம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகில் சென்று இறங்கிய இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் கைதாகினர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, மூதூர் பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரஜீஸ் மற்றும், ஏ.ஆர்.நிஹாஸ் ஆகிய இரண்டு முஸ்லிம்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த வசீகரன் என்பவருமே இவ்வாறு கைதாகினர்.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து தமிழகத்தின் பாதுகாப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கும் பல முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இவர்கள் இலங்கையில் இருந்து படகுமூலம் தமிழகம் சென்றிருக்கின்றனர்.

No comments