தமிழ் கட்சிகளது போக்கு சிக்கலானது:விக்கினேஸ்வரன்


தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களையும் சரியானபாதையில் சமூகம் மிகவும் காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை தற்போது அவசியமாகியிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் மத்தியகுழுக் கூட்டம் தமிழ் மக்கள் பேரவை அலுவலகத்தில் இன்று சனி இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

சந்தடி இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்கு எதிராக எமது மக்களின் எதிர்ப்புக்களை வலுவூட்டுவது காலத்தின் கட்டாயமாகும். எமது அல்லல்களையும் துன்பங்களையும் தொலைதூரத்தில் இருக்கும் எமது சக பூகோள பிரஜைகளுக்கும் அதிகார மையங்களுக்கும் கொண்டு சென்று நடந்த மற்றும் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக அவர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் எமது தமிழ் மக்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இன்று நின்றுகொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசியல் கட்சிகளின் சுயநல அடிப்படையிலான போட்டி அரசியல் ஒரு புறம்;;மறுபுறத்தில் தமிழ் மக்களின் இருப்பை வடக்குகிழக்கில் இல்லாமல் செய்யும் பொருட்டு அரசாங்கத்தின் திட்டமிட்ட நிலஅபகரிப்பு நடவடிக்கைகளும், சிங்களக்குடியேற்றங்களும்,பௌத்தமயமாக்கலும்  முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன. 10 வருடங்கள் ஆகியுள்ள போதிலும்  இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட எமது மக்களுக்கு எந்தவித நீதியோ தீர்வோ வழங்கப்படவில்லை. 

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களையும் சரியான பாதையில் சமூகம் மிகவும் காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளவேண்டி இருக்கின் நெறிப்படுத்திப் போராட்டப் பாதையை செம்மைப்படுத்துவதற்கு சிவில்  றது.  சந்தடி இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்கு எதிராக எமது மக்களின் எதிர்ப்புக்களை வலுவூட்டுவது காலத்தின் கட்டாயமாகும். எமது அல்லல்களையும் துன்பங்களையும் தொலைதூரத்தில் இருக்கும் எமது சக பூகோள பிரஜைகளுக்கும் அதிகாரமையங்களுக்கும் கொண்டு சென்று நடந்த மற்றும் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராகஅவர்களைநடவடிக்கைஎடுக்கத் தூண்டுவதற்கானநடவடிக்கைகளைநாம் எடுக்கவேண்டும்.  எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநியாயங்கள் மற்றும் அட்டூழியங்களைநாம் வெளி உலகத்துக்கு எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்துகின்றோமோ,எவ்வளவுக்கு எவ்வளவு யதார்த்தநிலையை அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றோமோ,எவ்வளவுக்கு எவ்வளவு எமது வலிகளைஅவர்களின் வலிகளாக உணரும்படி செயற்படுகின்றோமோ,அப்பொழுதுதான் ஏனைய  சமூகங்களைநாம் எம்மை நோக்கிகவனம் செலுத்தவைக்கவும் எமக்காக செயற்படவும் வைக்கமுடியும். எமது துன்பங்கள்,துயரங்களை எடுத்துக்கூறி ஒரு பகிரப்பட்டமனிதநேயஉணர்வைசர்வதேசரீதியில் ஏற்படுத்துவதற்குப்பாடுபடும் அதேவேளை,அநியாயங்களுக்கு எதிரானமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைளையும் நாம் வலுப்படுத்தவேண்டும். 

நான் முதலமைச்சராக இருந்த போது என்னைக்காணவந்த அத்தனை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அரச தூதுவர்களுக்கும் எமது நிலை பற்றிக் கூறியது மட்டுமன்றி எழுத்து மூலமாகவும் பலவிபரங்களை; ஆவணங்கள் மூலம் தெரிவித்துவந்தேன். இலங்கையின் உண்மைநிலைபற்றிஅறியவேண்டுமானால் வடமாகாணமுதலமைச்சரிடமேகேட்கவேண்டும் என்றுஒருவெளிநாட்டுப் பிரதிநிதி கூறியதாக இன்னொருநாட்டின் பிரதிநிதி கூறியிருந்தார். பதவிக்காலம் முடிந்ததும் அவ்வாறானசந்திப்புக்கள் மிகவும் குறைந்துபோய்விட்டன. எனினும்,கனேடிய,பிரித்தானியஉயர்மட்டபிரதிநிதிகள்வந்துஎன்னைஎன் வீட்டில் சந்தித்துள்ளனர்.


 ஆகவே,எமதுகுரல் தொடர்ந்துஒலிக்கநடவடிக்கைகள் அவசியமாகின்றன. அத்துடன்,மேலும் இரு வருடங்கள் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் சபையால் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந் நேரத்தில் இரண்டுவருடங்களின் பின்னர் சபையில் அங்கம் வகிக்கப்போகும் நாடுகளை இப்பொழுதிருந்தேசந்தித்துஎமதுகுறைகளைஅவர்களிடம் கூறிஅடுத்;த முறைமேலும் காலநீட்சிதராமல் பார்க்கவேண்டியுள்ளது.
இந்த வகையில்,தமிழ் மக்கள் பேரவைக்குமுன்பாகஒருபெரும் பணிகாத்துக்கிடக்கின்றது. இங்கு கூட்டங்களைநடத்துவதும் பின்னர் கலைந்துசெல்வதுமாகநாம் எமதுகாலங்களை இனிமேலும் கடத்திச்செல்லமுடியாது. நாம் கடந்தகாலங்களில் “எழுகதமிழ்”நிகழ்வுகள் உட்படபலபணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம். தமிழ் மக்கள் பேரவைஒருமக்கள் இயக்கம் என்றஅடிப்படையில் எமதுசமூகத்தின் அங்கங்களானபல்கலைக்கழகம், இந்து,கத்தோலிக்கஅமைப்புக்கள்,வர்த்தகசங்கங்கள்,மீன்பிடிசமாசங்கள்,விவசாயிகள் சம்மேளனங்கள்,தமிழர் மரபுரிமைப்பேரவை,தமிழ் சிவில் சமூகம் போன்றபலவற்றுடன் இணைந்துமக்கள் மயப்படுத்தப்பட்டசெயற்பாடுகளைமீண்டும் எழுச்சியுடன் முன்னெடுக்கவேண்டியுள்ளது. சிலகாலம் நாங்கள் சற்றுத் தடுமாற்றத்தில் இருந்துவந்தோம். இனிஅதற்கு இடமில்லை.நிலஆக்கிரமிப்பு,மதஆக்கிரமிப்பு,மத்தியஅரசதிணைக்களங்களின் உள்ளீடல்,தமிழ்ப் பேசும் மக்களிடையேபிளவுகள் ஏற்படுத்தும் ஆள்பவர்களின் சூழ்ச்சிஆகியனமிகவேகமாகஎம்மைப் பாதித்துவருகின்றன. இராணுவத்தினரின் தலையீடுகளும் தற்போதுபுதியஉத்வேகத்துடன் நடைபெற்றுவருகின்றன. 

எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலஆக்கிரமிப்பு, சர்வதேச போர்க்குற்றவிசாரணையில் ஏற்பட்டுள்ள தேங்குநிலை,அரசியல் கைதிகளின் விடுதலை,வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமானநம்பத்தகு விசாரணைகள் நடைபெறாமை, இராணுவமயமாக்கல்மற்றும் மீள்க்குடியமர்வுபோன்றஆறுவிடயங்கள் தொடர்பில் நியாயம் கோரிசர்வதேசசமூகத்தின் கவனத்தைஈர்க்கும் வகையில் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றைஉடனடியாகமேற்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றேன்.  

தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைக்கும் வகையில் முல்லைத்தீவு,மற்றும்  திருகோணமலை ஆகியமாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் மிகப்பெரும் அளவில் சிங்களக்குடியேற்றங்கள் இடம்பெறுவதுடன் வடக்குகிழக்கின் ஏனைய எல்லா இடங்களிலும் அரசதிணைக்களங்கள் முழுமையாகஈடுபடுத்தப்பட்டுஎமதுநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. பாரியஒருசெயல்திட்டத்தைநாம் மாகாணசபையில் இருந்தபோதுநடைமுறைப்படுத்தவிழைந்தபோது எம்மால் அடையாளம் காட்டப்பட்டகாணியை வன திணைக்களத்திற்குசொந்தம் என்று கூறிஅந்தசெயல்திட்டம் நிறுத்தப்பட்டது. அவ்வளவுக்கும்குறித்தகாணிக்கும் வன திணைக்களத்திற்குமிடையில் எந்தவிததொடர்பும் இல்லை. இவ்வாறுஅபகரிக்கப்படும் நிலங்களில் பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் துரிதமாகமுன்னெடுக்கப்படுகின்றன. 
இறுதியுத்தத்தின்போதுஎமதுமக்களுக்குஎதிராகமேற்கொள்ளப்பட்டபோர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்குஎதிரானகுற்றங்கள் தொடர்பில் ஆரம்பவிசாரணைகள் கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாகநல்லாட்சிஎன்றமுகமூடியைஅணிந்துகொண்டுகடந்த 5 வருடங்களில் இந்தஅரசாங்கம் இலங்கைதொடர்பில் ஐ.நா மனிதஉரிமைகள் மேற்கொண்டதீர்மானத்தைமுற்றிலும் உதாசீனம் செய்துள்ளதுடன் எமதுமக்களுக்குஎதிராககட்டமைப்புரீதியானதும்,கலாசாரரீதியானதுமான இனப்படுகொலையைதொடர்ந்துமேற்கொண்டுவருகின்றது. 
அரசபடைகளுக்குஎதிரானபோர்க்குற்றவிசாரணைகளைமுற்றாகநிராகரித்துள்ளஅரசாங்கம்,யுத்தத்தில் ஈடுபட்டஎமது இளைஞர்களைநீண்டகாலமாகசிறைகளில் அடைத்துவைத்துதண்டனைக்குஉட்படுத்திவருகின்றது. சாத்வீகவழிகளில் சிறைகளில் பலதடவைகள் உண்ணாவிரதபோராட்டங்களைமேற்கொண்டும் அவர்களின் கோரிக்கைகள்  செவிமடுக்கப்படவில்லை. 
இறுதியுத்தத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டதமதுஉறவுகள் தொடர்பில் உரியபதிலைவழங்குமாறுவலியுறுத்திஎமதுமக்கள் வீதிகளில் நின்றுபலவருடங்களாகமேற்கொண்டுவரும் போராட்டங்களைஅரசாங்கம் கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளவில்லை. 
சுமார் ஒருலட்சம் வரையிலான இராணுவத்தினர் வடக்குகிழக்கில் நிலைகொண்டுநிலஅபகரிப்பு,சிங்களகுடியேற்றம் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்குஆதரவும் பாதுகாப்பும் வழங்கிவருகின்றனர். 
யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்டுள்ளபோதிலும் இடம்பெயர்ந்துள்ளஎமதுமக்கள் முழுமையாகமீளக்குடியமர்தப்பப்படவில்லை.  இராணுவம் எமதுமக்களின் காணிகளிலும்வீடுகளிலும் குடியிருக்கஎமதுமக்கள் இடம்பெயர் முகாம்களில் பலவருடங்களாக இன்னல்களைஅனுபவித்துவருகின்றனர். 
இவை எல்லாமே இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பைமுற்றிலுமாக இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் நன்குதிட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கானநிகழ்ச்சித்திட்டத்தின் பரிமாணங்களே. 
ஆகவேதான், இந்தஅடக்குமுறைகளையும்,அநியாயங்களையும் இவற்றுக்கானஎமதுஒட்டுமொத்தஎதிர்ப்பையும்  காட்டும் அதேவேளைசர்வதேசசமுகத்தின் கவனத்தைஈர்க்கும் வகையிலும் இனப்படுகொலைக்குஎதிரான“எழுகதமிழ்”நிகழ்வுபோன்றநிகழ்வுகளையாழ்ப்பாணம் உட்படவடக்குகிழக்கின் முக்கிய இடங்களில் நாம்  நடத்துவதுபொருத்தமாக இருக்கும் என்றுகருதுகின்றேன். இது தொடர்பில் அண்மைக்காலமாகபலபுத்திஜீவிகளும் சமூகசெயற்பாட்டாளர்களும் என்னைவலியுறுத்திவருந்திருக்கின்றார்கள். எம்முடன் பயணிக்கும் சகஅரசியல் கட்சிகளும் இது பற்றிக் கூறியுள்ளார்கள். நிலஅபகரிப்புநடவடிக்கைகள் அரசமயமாக்கப்பட்டுஉச்சஅளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காலதாமதம்  இன்றி இந்தநிகழ்வுகளைமேற்கொள்ளவேண்டும் என்பதுஎனதுகோரிக்கை.செப்டெம்பர் மாதத்தில் முதலாவதுநிகழ்வைநடத்தலாம் என்றுஅபிப்பிராயப்படுகின்றேன்.
இது தொடர்பில் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். இந்தக் கோரிக்கைசம்பந்தமாகநீங்கள் உடன்படுவீர்களானால் இது தொடர்பில் ஒருசெயற்குழுவைஅமைத்துஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளைநாம் உடனடியாகஆரம்பிக்கலாம். ஆர்ப்பாட்டநிகழ்வுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் நிலஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல்,சிங்களக்குடியேற்றங்கள் தொடர்பில் தகவல்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டிஆவணப்படுத்திஅவற்றைவெளியீடுசெய்யும் நடவடிக்கைகளிலும்நாம்கவனம் செலுத்தவேண்டும் என்றுவேண்டிக்கொள்கின்றேன். மேலும்,நிலஆக்கிரமிப்புமற்றும் இனப்படுகொலைஆகியவைதொடர்பில்   வெளிநாடுகளில் இருக்கக்கூடியநிபுணர்கள்  மற்றும் செயற்பாட்டாளர்களை இந்தநிகழ்வுகளுக்குஅழைப்பதுபற்றிஆராய்ந்துஉங்கள் கருத்துக்களைச்சொல்லுங்கள். அத்துடன், இந்தவிடயங்கள்  தொடர்பில் பணியாற்றிவரும் உலகளாவியஅரசசார்பற்றநிறுவனங்களுடன் இணைந்துசெயலாற்றலாமாஎன்பதைப்பற்றியும் ஆராய்ந்துஅறிவுரைவழங்குவீர்களாக.
அண்மையில் கிழக்குசென்றிருந்தேன். கல்முனைபிரதேசசபையைத்தரம் உயர்த்துவதுசம்பந்தமாகபாராளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெற்றநாளன்றுதமிழர் தம் கோரிக்கைசார்பானநடவடிக்கைகளைஉடனேஎடுக்ககொழும்பில் இருந்துகட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனவாம்.வாக்கெடுப்புமுடிந்துஅடுத்தநாளேஅமைச்சரின் கட்டளைஒன்றுஅவசரஅவசரமாகக் கல்முனைக்குச் சென்றடைந்தது. அதாவதுமுதல் நாள் “செய்யுங்கள்”எனக் கூறப்பட்டஅனைத்துச் செயல்களையும் “நிறுத்துங்கள்”எனப்பட்டதாம். எவ்வளவு இலேசாகஎம் பாராளுமன்றஅங்கத்தவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்று இதிலிருந்துபுரிந்துகொள்ளலாம். எமது இனம் தொடர்ந்துஏமாற்றப்படுவதைநாம் இனியும் பொறுத்துக் கொள்ளமுடியாது. எனவேமக்கள் இயக்கமானதமிழ் மக்கள் பேரவைமக்களைத் திரட்டிஎமதுமனநிலையை ஊர்,உலகத்திற்குஉரக்கக்கூறி;வெளிப்படுத்துவதுகாலத்தின்கட்டாயமாகின்றது என்று நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments