முற்றுகின்றது சஜித்-ரவி முறுகல்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியனவற்றின் வேட்பாளர் அனைத்தையும் வெற்றி கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச நாள் தோறும் 100 முதல் 150 லட்சம் ரூபா விளம்பரத்திற்காக செலவிட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் கட்சியின் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களில் சஜித் பிரேமதாசவும் ஒருவர். அவரை மட்டுமே மேலே கொண்டு வர சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

கட்டடத்தை மாற்றுவதற்கு தாம் எடுத்த முயற்சி குறித்து ஊடகங்கள் பிரச்சாரம் செய்த போதிலும் சஜித் சிறிய சிறிய வீடமைப்பு திட்டங்களுக்காக நாள் தோறும் கோடிக் கணக்கில் செலவிடுவது பற்றி ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

No comments