மக்களை முட்டாளாக்கிய ஆர்னோல்ட் அம்பலமான ஆதாரங்கள்



 யாழ்.மாநகரசபை எல்லைக்குள் எந்த அனுமதியும் பெறப்படாமலேயே ஸ்மாட்போல் கம்பங்கள் நாட்டப்பட்டு கொண்டிருப்பதாக யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கின்றாா்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் விப்பறிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையீல்,கடந்த சபை அமர்வுக்கு முன்னர் முதல்வர் தாங்கள் R.D.A இன் அனுமதியையும் அத்துடன் மிக முக்கியமாக T.R.C யின் அனுமதியுடன் தான் இக் கம்பங்கள் நிறுவப்படுகின்ற என்று தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி தந்திருக்கின்றது. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி தந்திருக்கின்றது

என்று ஏதோ ஆவணங்கைத் தூக்கி சபையில் காட்டினார். இது நடந்த விடயம்.நானும் அதே போல் அது உண்மைதானா என்று அவ் விடயத்தை அணுகினேன்.

1. வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் இது தொடர்பில் தகவல் ஒன்றினை கோரியிருந்தேன். அதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ்.மாநகரசபை மற்றும் ஆகியோருக்கிடையான ஒப்பந்தம் மூலம் பொருத்தப்படும் Smart Lamp pole இற்கான அனுமதி எதுவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பெறப்படவில்லை.

மேலும் R.D.A விற்குரிய வீதிகளில் 2 Smart Lamp pole fs; அனுமதி பெறப்படாமல் நடப்பட்டுள்ளது இது குறித்து யாழ்.மாநகர மேயருக்கும் யாழ்.மாநகர ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்றுள்ளது. ஆக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி பெறப்பட வில்லை.

 2. மிக முக்கியமான விடயம் முதல்வர் குறித்த ஊடகவியளாளர் சந்திப்பில் இக் கோபுரங்களுக்கு உரிய படி T.R.C அனுமதி பெறப்பட்டுள்ளது அதன்படியே நிறுவுகின்றோம் என்று குறிப்பிட்டார். இதனையே சபையிலும் ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.

அவர்கள் எதை வைத்துக்கொண்டு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

இன்று அது அனுப்பியுள்ள கடித்தில் “ As per our records, approval has not been granted for smart lamp poles in Jaffna municipal council area and Edotco services (pvt) Ltd is not a licence Operator” என்று அனுப்பியுள்ளது. அதாவது யாழ்.மாநகர சபை எல்லைக்கு எந்த ஒரு சிமாட் லாம்போல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் குறித்த நிறுவனம் எந்த வித அனுமதியும் இல்லாத ஒரு சேவை வழங்குனர் என்றும் தெரிவித்துள்ளது.

ஆக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தகவலின் படி.. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எந்த வித அனுமதியும் இல்லாமல் அதுவும் அனுமதிச்சான்றிதழ் இல்லாத ஒரு வழங்குனருடன் (Edotco services (pvt) Ltd is not a licence Operator)

யாழ்.மாநகர சபை எவ்வாறு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு Smart Lamp pole fis யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நிறுவலாம்? இது ஏற்புடையதா?உரிய அனுமதிகள் ஏன் பெறப்பட வேண்டும் ஏன்என்றால் குறித்த விடயங்கள் மக்களுக்கு தீங்கை விளைவிக்காதவையாக

இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உரிய அனுமதிகளும் சட்டங்களும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே உரியன .இது ஒரு நேர்மையான உண்மையாக மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் என்றால் நிச்சயமாக உரிய அனுமதிகளை

உரிய படி பெற்று உரிய நடைமுறைப்படி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு இது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இது அவ்வாறு செய்யப்பட வில்லை. அனுமதிகள் எதுவும் பெறாமல் செயற்படுத்தப்படுகின்றது.

கம்பரலிய திட்டத்தில் போடப்படுகின்ற வீதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின் போது மாலையுடன் தேங்காய் உடைத்து அவ் வீதிக்கான ஆரம்ப வைபவத்தை நடத்துபவர்கள் யாழ். மாநகர சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு சாதாரண

குளிர்களி விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதற்கு இவ்வளவு பெரிய விழா எடுத்தவர்கள் எங்களுடைய மாநகரத்தை ஸ்மாற் நகரமாக மாற்றுகின்ற இச் செயற்றிட்டதில் ஏன் ஒரு சிறு ஆரம்பர விழாவையும் நடத்தாமல் நள்ளிரவு வேளையில்

யாருக்கும் தெரியாமல் இக் கோபுரங்களை நிறுவுகின்றார்கள் என்ற கேள்வியும் ஏழாமல் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments