கல்முனையில் பேருந்து மீது கல் வீச்சு

கல்முனையிலிருந்து அன்னமலை நோக்கி பயணித்த தனியாா் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இன்று சனிக்கிழமை(27) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை தனியார் பஸ்ஸில் அதிகளவான மக்கள் பயணம் செய்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேற்படி தாக்குதலினால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலும் பயணத்தை இடைநிறுத்திய தாக்குதலுக்குள்ளான பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட மக்கள் அநேகமானோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை காண முடிந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments