புதுக்குடியிருப்பில் அரசியல் வியாபாரம்!


தமிழ் அரசியல் போராளிகள் என்ன கனவுகளுடன் தமது இன்னுயிர்களை இழந்தார்களோ அது பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களை முன்னிறுத்தி தமது அரசியல் நலன்களிற்காக விற்பனை செய்யும் போக்கு அண்மையில் அதிகரித்தே வருகின்றது.குறிப்பாக தமது போராளிகளது தியாகங்களினை கிடப்பில் போட்டுவிட்டு அரசியல் செய்வதில் முன்னின்று செயற்படுகின்ற ஒரு தரப்பாக கூட்டமைப்பின் டெலோ அமைப்பும் உள்ளது.

கட்சி தலைமை தொடக்கம் அனைத்து தரப்புக்களும்  இதற்கு விதிவிலக்கல்ல.

தனது காணாமல் போன மகனினை தேடி போராடி உயிர்துறந்த தாயொருவரது இறுதி கிரியை நடைபெற்ற அதே புதுக்குடியிருப்பில்  வெலிக்கடைச் சிறைப் படுகொலை 36 வது நினைவு தின அஞ்சலி நிகழ்வினை கோலாகலமாக நடாத்தியுள்ளது டெலோ.

இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா முதல் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் என அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்ட போதும் எவருமே உயிரிழந்த அந்த தாயாராது இறுதி நிகழ்வில் எவருமே கலந்து கொள்ளவில்லையென தெரியவருகின்றது.

வடக்கில் 800 நாட்களை கலந்து முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டப்பக்கமே கூட்டமைப்பு எட்டிப்பார்ப்பது இல்லையென்பது தெரிந்ததே.

No comments