கன்னியா சுடுதண்ணிக் கிணற்றில் மூக்கை நுளைத்த சுமந்திரன்


கன்னியாய் வெந்நீரூற்று விவகாரத்தில் சுமந்திரனின் அநாவசிய தலையீடு காரணமாக  கன்னியா சட்ட நடவடிக்கையில் இருந்து ‘நீலகண்டன் உடன் நீலகண்டன்‘ Neelakandan & Neelakandan சட்ட நிறுவனம் விலகியது

கன்னியா வெந்நீறூற்றுக்களின் மீது நடாத்தப்படும் பேரினவாத கையகப்படுத்தல்கள் தொடர்பாக ஆரம்பம் தொட்டே சட்ட நடவடிக்கைகளை நீலகண்டன் நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

சட்டத்துறையின் மிக முன்னொடிகளில் ஒருவரான கனக.ஈஸ்வரன் ஐயா அவர்களின் வழிநடத்தலில் கன்னியா விடயத்தில் சட்ட நடவடிக்கைகளை நீலகண்டன் நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் கள ஆய்விற்காகவும் மேலதிகச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் திருகோணமலைக்கு வருகை தந்திருந்த திரு. பிரணவன் நீலகண்டன் கன்னியா வெந்நீறூற்றுக்களிற்கு வருகை தந்து காணி உரிமையாளரான அம்மாவுடன் கலந்துரையாடல்களை நடாத்திவிட்டு பின்னர் தென்கைலை ஆதீனத்தில் ஆதீன முதல்வரையும் ஏனைய கன்னியா மரபுரிமைசார் தொழிற்பாடுகளை முன்னெடுத்தவர்களையும் சந்தித்துப் பேசிச் சென்றிருந்தார்.

எனினும் கடந்த வாரம் சுமந்திரன் குறித்த காணி உரிமையாளரான அம்மாவை திருமலை நவம் ஆகியோருடன் சந்தித்து பேசியுள்ளார். அதனையடுத்து திருகோணமலையில் காணி வழக்கைக் கையாளும் ஏக சட்டப் பிரதிநிதிகளாகத் தம்மை முன்மொழியும் ஆவணத்தில் - Proxy- கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சட்டத்துறையில் சட்டத்தரணிகளுக்கிடையில் பேணப்படும் தொழிற்கோட்பாட்டு ஒழுக்கவியலுக்கு முற்றிலும் - Professional Ethics - முரணாக அமைந்துள்ளது.

இதனையடுத்து கன்னியா வென்நீறூற்று தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பிலிருந்து நீலகண்டன் உடன் நீலகண்டன் நிறுவனம் விலகியுள்ளது.

No comments