ஜனாதிபதி கோத்தாவா:சொல்லவேயில்லையென்கிறார் மகிந்த?


அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோத்தாவை ஜனாதிபதி வேட்பாளராக்குவது தொடர்பில் தமிழ் தரப்புக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டே வருகின்றன.அத்துடன் மகிந்த குடும்பத்தினுள்ளும் இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவரும் நிலையில் மகிந்தவின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம் நாட்டிலிருந்து இன்னும் ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments