16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த வாரம் நியமனம்

நாடுமுழுவதும் தெரிவு செய்யப்பட்ட 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வரும் 29,30 மற்றும் 31ஆம் திகதிகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 16 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜூலை வரும் 29,30 மற்றும் 31ஆம் திகதிகளில் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments