ஞானசாரரிற்கு ஒரு நீதி:தேவதாசனிற்கு இன்னொன்று!


இலங்கை ஒரு ஜனநாயகநாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் பொதுபலசேனா ஞானதேரரை மன்னிப்பு அளித்து விடுதலை செய்கின்ற அரசு அரசியல் கைதி தேவதாசனையோ அல்லது எனைய அரசியல் கைதிகளை விடுவிக்க மறுப்பதாக கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் வணபிதா.எஸ்.பி.மங்களராஜா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்று 16 வருட சிறைத்தண்டனை பெற்றவர் இந்த பிக்கு ஞானதேரர். ஒரு சில மாதங்களே சிறையில் இருந்த அவரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

தற்போது 95 வரையிலான அரசியல் கைதிகள் மட்டுமே உள்ளதாக அரசு வாதிடுகின்றது. ஆனால் இலங்கை அரசினால் எந்தவொரு அரசியல் கைதியும் பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்படவில்லை.

விடுவிக்கப்பட்டவர்கள் தம்மீதான பொய்க்குற்றச்சாட்டுக்களை முறியடித்தோ அல்லது மரணத்தை தழுவியோதான் விடுதலையினை பெற்றுள்ளார்கள்.
கனகசபை தேவதாசன் தனது தரப்பு நியாத்தை முன்வைக்க அனுமதிக்கப்படவேண்டும்.அல்லது பொதுமன்னிப்பு அளித்தோ அவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும். 

அதிலும் உண்ணாவிரதத்தை தொடரும் தேவதாசனின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னாள் தமிழ் அரசியல் தலைவர்கள் கூட்டிணைந்து அவரது கோரிக்கையினை நிறைவேற்றவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.No comments