கூட்டமைப்பு தவறிழைத்து விட்டது! செல்வம் ஆதங்கம்?

அமைச்சர் மனோகணேசன் ஏற்பாடு செய்த ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பங்பற்றாமை பெரும் தவறு என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வரலாற்றைச் சிதைப்பதற்கான செயற்பாட்டினை இன்று சிங்களதேசம் செய்து வருகின்றது. அதனை எதிர்க்கும் முகமாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை மனோ கணேசன் செய்திருந்தார்.

எங்கள் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உரிமைகளை வென்றெடுக்கவும் நாங்கள் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு இந்த விடயத்தில் தவறிழைத்து விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

No comments