மாநகரசபைதான் பொய் சொல்கிறது

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நிறுவப்படும் Smart pole கம்பங்கள் தொடா்பாக மக்களை வேறு எவரும் குழப்பவேண்டிய அவசியம் இல்லை. என கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன், மாநகரசபையே மக்களுக்கு பொய்களை கூறி மக்களை குழப்புவதாக கூறினாா்.

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், நேற்று Smart pole கம்பங்கள் நாட்டப்படுவதை எதிா்த்து குருநகா் மக்கள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து கூறிய மாநகர முதல்வா் இ.ஆனல்ட் சிலா் மக்களை வேண்டுமென்றே குழப்புவதாக கூறியுள்ளாா்.

இது தொடா்பான உண்மைகளை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக முதல்வாின் கருத்துக்கு பதிலளிக்கவேண்டியவா்களாக நாங்கள் இருக்கிறோம். அந்தவகையில் மக்களை வேறு எவரும் குழப்பவேண்டிய அவசியம் கிடையாது. காரணம் மாநகரசபையே மக்களை குழப்புகிறது.

Smart pole கம்பங்கள் நிறுவுவதற்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டபோது பல இடங்களில் எதற்காக குழி வெட்டுகிறீா்கள்? என மக்கள் கேட்டிருக்கின்றாா்கள். அதற்கு  குடிநீர் குழாய் வேலைக்கு வெட்டுகின்றோம், லைற் பூட்டுவதற்கு வெட்டுகின்றோம்,

 கமரா பூட்டபோகின்றோம், இடி தாங்கி பூட்ப்போகின்றோம். என மக்களுக்கு அப்பட்டமான பொய்களை கூறியது வேறு யாருமல்ல மாநகரசபையே, மேலும் அதில் பூட்டப்பட இருக்கும் அன்ரனா பற்றி கூற தயங்குகின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள்.

இது தான் மக்களுக்கு உண்மைகளை மறைத்து பிழையான கருத்துக்களை கூறுத்தொடங்கும் நிகழ்ச்சியின் ஆரம்ப புள்ளி. இதற்கு இரண்டு உதாரணங்கள் குருநகரில் நேற்று Smart lamp pole க்கு எதிராக ஒரு மக்கள் போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்திலே கலந்து கொண்ட மக்கள் கூறுகின்றார்கள்  ஏன் இந்த கோபுரத்தை அமைக்கின்றீகள் என்று கேட்டபோது  நல்ல லைற் வெளிச்சம் வரும் உங்களுக்கு, எனி கமராக்கள் மூலம் பாதுகாப்பு இருக்கும் என்று மட்டும் தான் கூறினார்கள்.

வேறு எதுவும் கூறவில்லை அதனால் தான் நாங்கள் அனுமதித்தோம் என்கின்றார்கள். ஆக உங்களுக்கு இனிமேல் நல்ல வெளிச்சம் வரும் என்று அந்த மக்களுக்கு கூறுபவர்கள் ஏன் உங்களுக்கு இனிமேல் நல்ல சிக்னல் வரும் என்று ஏன் கூற தயங்குகின்றார்கள்?

அடுத்த விடயம் இன்னும் சுவாரஸ்யமானது  கொழும்புத்துறை துறைமுகத்திற்கு பக்கத்தில் குறித்த கோபுரம் அமைப்பதற்கு குழி அமைக்க முற்பட்ட போது அந்த பகுதி மக்கள் எதற்கு என்று கேட்டதற்கு அவர்கள் “100 அடி உயரத்தில் மின் விளக்கு பொருத்தப்போகின்றோம்.

கடலில் இருந்து வருகின்ற படகுகளுக்கு கரை தெளிவாக தெரியும். அக் கரையில் இருப்பவர்களுக்கு இக் கரை தெரியும்” என்று கூறினார்களாம். அப்போது மகிழ்ச்சியடைந்த மக்கள் இது தங்களுடைய தொழில் விருத்திக்கான செயற்பாடு என்று எண்ணி

தாங்களும் அக் குழிகளை வெட்டுவதற்கு உதவி புரிந்தனர் என்கின்றனர். பின்னர் உண்மை நிலை வெளிவர அந்த மக்களே அதனை மூடிவிட்டனர். ஆகவே இதுதானா அந்த மக்களை குழப்பும் செயற்பாடு என நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றாா். 

No comments