மிஞ்சிய உணவு கொடுக்கப்போய் வாங்கிக் கட்டிய தமிழரசு



தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டின்போது கவனயீா்ப்பு போராட்டம் நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை மதுபோதையில் வந்தவா்கள் என கூறியதுடன், கண்டு கொள்ளாமல் சென்ற தமிழரசு கட்சியினா் மிஞ்சிய உணவை கொடுக்க சென்றபோது அடித்து விரட்டப்பட்டுள்ளனா்.

வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழரசு கட்சி ஆக்கபூா்வமான நடவடிக்கை எதனையும் எடுக்காதமையை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் போராட்டம் நடத்தியிருந்தனா்.

இந்நிலையில் போராட்டத்திற்குள் நுழைந்த தமிழரசு கட்சி உறுப்பினா்கள் சிலா் மதுபோதையில் போராட்டம் செய்ய வந்துள்ளாா்கள் எனவும், நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தனின் துாண்டுதலில் போராட்டம் செய்ய வந்துள்ளாா்கள் எனவும் திட்டியதுடன், சம்மந்தன் உட்பட எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும்

மக்களுடன் பேசாமல் கண்டு கொள்ளாததுபோல் சென்றனா். இதன் பின்னா் மக்களை அவதுாறாக பேசிய அதே தமிழரசு கட்சி உறுப்பினா்கள் சிலா் உணவு பொட்டலங்களுடன் சென்று மக்களுக்கு கொடுக்க முயன்றனா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவா்களை அங்கிருந்து தள்ளி அடித்து கலைத்தனா். 

No comments