நீராவியடியில் முறுகல் - பொங்கல் விழாவை தடுக்க பொலிஸாா் தீவிர முயற்சி..!







முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு நீராவியடிப்பிள்ளையார் ஆலயயத்தில் இன்றைய நாள் தமிழ் மக்கள் 108பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பொங்கலுக்காக அடுப்புகளை ஒழுங்கமைப்பு செய்யும்போது, அடுப்புகளைபிக்கு அத்து மீறி குடியிருக்கும் கட்டடத்தை அண்மித்து வைக்கவேண்டாம் என போலீஸார்

பொங்கலுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர். அடுப்புகளை கோவிலுக்கு வெளியே வீதியில் வைத்து பொங்குமாறும் போலீஸார்

மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். அடுப்பிற்கும் பிக்கு அத்துமீறி குடியிருக்கும் கட்டடத்திற்கும் மிக நீண்ட இடவெளி காணப்படும்போதிலும்,

அங்கு இருக்கின்ற பிக்கு மற்றும் சில சிங்க மக்களுடைய பேச்சினை கேட்டு போலீஸார் குழப்பம் விளைவிப்பதாக அடியவர்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து போலீஸாரின் அச்சுறுத்தலினை அடுத்து சில அடியவர்கள் கோவிலுக்கு வெளியில் வீதியின் இருமருங்கும் பொங்கலை

மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் எதிா்ப்புக்களை மீறி மக்கள் வெற்றிகரமாக பொங்கலை ஆரம்பித்துள்ளனா். 

No comments